முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பூரி கிழங்கு மசாலா(boori kilangu masala)

கிழங்கு மசாலா தேவையான பொருட்கள்: உருளை கிழங்கு - கால் கிலோ மசாலா தூள் - 1 1/2 டீஸ்பூன்  உப்பு - தேவைக்கு  தாளிக்க: எண்ணெய் - 2 டீஸ்பூன்  கடுகு - கால் டீஸ்பூன்  சீரகம் -கால் டீஸ்பூன்  கடலைபருப்பு - 1 டீஸ்பூன்  பச்சை மிளகாய் - 1  கறிவேப்பிலை - சிறிது  பெருங்காயம் - சிறிது  செய்முறை: உருளைகிழங்கை குக்கரில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும். வெந்த கிழங்கை கைகளால் நன்றாக மசித்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுக்கவும். பின்பு அதனுடன் மசித்த உருளை கிழங்கு, மசாலா தூள், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பத்து நிமிடங்கள் கொதித்த பின் இறக்கவும். பூரி மசாலா கெட்டியாக வேண்டுமென்றால் இரண்டு டீஸ்பூன் கடலை மாவை சிறிது தண்ணீரில் கலக்கி ஊற்றி கெட்டியானவுடன் இறக்கவும். பூரிக்கு நல்ல காம்பினேஷன் கிழங்கு மசாலா ரெடி. *************************************** பூரி தேவையான பொருட்கள்: கோதுமை மாவு - 1 கப் மைதா மாவு - அரை கப் உப்பு - தேவைக்கு தண்ணீர் - த

சிம்பிள் வெஜ் ரைஸ் (simple veg rice)

தேவையான பொருட்கள்: அரிசி - ஒன்றரை கப் காரட் - 1 உருளை கிழங்கு - 1 வெங்காயம் - 1 தக்காளி - பாதி தயிர் - 3 டீஸ்பூன் உப்பு - தேவைக்கு மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் கரம் மசாலா - ஒரு பின்ச் அரைக்க: இஞ்சி - சிறிய துண்டு பூண்டு - 3 பல் கசகசா - 1/4 டீஸ்பூன் சோம்பு - 1/4 டீஸ்பூன் சீரகம் - 1/4 டீஸ்பூன் பட்டை - 1 லவங்கம் - 2 சின்ன வெங்காயம் - 2 தாளிக்க: எண்ணெய் - 3 டீஸ்பூன் சீரகம் - அரை டீஸ்பூன் செய்முறை: முதலில் அரிசியை களைந்து அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். காரட், உருளை கிழங்கு, வெங்காயம், தக்காளி இவற்றை நடுத்தர அளவில் கட் செய்து கொள்ளவும். அரைக்க வேண்டிய சாமான்களை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து வைத்துக்கொள்ளவும். ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து அரைத்த மசாலாவை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்பு அதில் வெங்காயம், தக்காளி, காய்கறிகள் என ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும்.  அதனுடன் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் தயிர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கிய பின்னர் ஊற வைத்த அரிசி சேர்த்து தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைக்க

ப்ராக்கலி உருளை மசாலா பொரியல்

தேவையான பொருட்கள்: ப்ராக்கலி - 1 உருளைக்கிழங்கு - 1 மசாலா தூள் - 1 1/2 டீஸ்பூன் உப்பு - தேவைக்கு பூண்டு - 2 பல் தாளிக்க: எண்ணெய் - 2 டீஸ்பூன் கடுகு - கால் டீஸ்பூன் சீரகம் - அரை டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது செய்முறை: ப்ராக்கலியை சிறிய பூக்களாகவும், உருளையை சிறிய துண்டங்களாகவும் வெட்டி வைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பூண்டு போட்டு தாளித்தவுடன் வெட்டி வைத்துள்ள உருளை கிழங்கை போடவும். அரை டீஸ்பூன் மசாலா  தூள் மற்றும் சிறிது உப்பு போட்டு கிளறி மூடி போட்டு வேக விடவும். உருளை பாதி  வெந்தவுடன் இப்பொழுது  ப்ராக்கலியை சேர்த்து மீதம் உள்ள மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து மறுபடியும் மூடி போட்டு வேகவிடவும். சிறிது நேரத்தில் இரண்டுமே நன்றாக வெந்துவிடும். உப்பு சரிபார்த்து இறக்கவும். இப்பொழுது  ப்ராக்கலி உருளை மசாலா பொரியல் தயார். இதனை தயிர் சாதத்துடன் பரிமாற மிகவும் சுவையாக இருக்கும்.

ராகி இடியாப்பம்

தேவையான பொருட்கள்: கேழ்வரகு மாவு - ஒரு கப் தண்ணீர் - தேவையான அளவு உப்பு - ஒரு சிட்டிகை சர்க்கரை - 5 டீஸ்பூன் செய்முறை: மேலே குறிப்பிட்ட அனைத்தையும் தண்ணீர் ஊற்றி கலந்து கெட்டியான பதமாக பிசைந்து கொள்ளவும். இடியாப்ப அச்சில் பிசைந்த மாவை இட்டு இட்லி தட்டில் பத்து நிமிடம் வேக வைத்து எடுக்கவும். இதனை சூடாக பரிமாறவும். சுவையான ராகி இடியாப்பம் ரெடி.

ஈஸி முட்டை பொரியல்

தேவையான பொருட்கள்: முட்டை - 3  வெங்காயம் - 1 பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்  மிளகு - 1 டீஸ்பூன்  சீரகம் - 1 டீஸ்பூன்  உப்பு - தேவைக்கு  எண்ணெய் - 2 டீஸ்பூன்  செய்முறை: முதலில் வெங்காயத்தை சிறியதாக நறுக்கிக்கொள்ளவும். மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை, மிளகு, சீரகம் போட்டு நைசாக பொடி செய்து வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் உப்பு போட்டு நன்றாக வதக்கவும். அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும். முட்டை உதிர் உதிராக வரும் சமயம் அரைத்து வைத்த பொடியை கலந்து இறக்கவும். டேஸ்டி அண்ட் ஈஸி   முட்டை பொரியல் ரெடி.

ஜுக்கினி (zucchini) கூட்டு

ஜுக்கினி என்பது சத்துள்ள ஒரு காய். இதற்கு தமிழில் சீமை சுரைக்காய் என்று பெயர்.  தேவையான பொருட்கள் ஜுக்கினி - 2 வெங்காயம் -1 தக்காளி - 1 துவரம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் மசாலா தூள் - ஒன்றரை டீஸ்பூன் மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் உப்பு - தேவைக்கு தாளிக்க  எண்ணெய் - 2 டீஸ்பூன் கடுகு - அரை டீஸ்பூன் சீரகம் - அரை டீஸ்பூன் கடலை பருப்பு - 2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு பெருங்காயம் - சிறிதளவு செய்முறை முதலில் துவரம்பருப்பை அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி சிறிது மஞ்சள் தூள் போட்டு குக்கரில் வேக விடவும். ஜுக்கினி, வெங்காயம் மற்றும் தக்காளியை கட் செய்து கொள்ளவும். வெங்காயத்தை மட்டும் மிக்ஸி ஜாரில் போட்டு கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும். அதனுடன் அரைத்து வைத்த வெங்காயம், தக்காளி மற்றும் ஜுக்கினியை அடுத்தடுத்து போட்டு வதங்கும் வரை வேக விடவும். இப்பொழுது மசாலா தூள் மற்றும் உப்பு போட்டு சிரித்து தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக விடவும். காய் நன்கு வெந்தவுடன் வேக வைத்துள்ள துவரம்பருப்பை அதனு

தக்காளி சாதம்

தேவையான பொருட்கள் அரிசி - 1 கப்  தக்காளி - 2 வெங்காயம் - 1 இஞ்சி - சிறிய துண்டு  மிளகாய் தூள் - அரை டீஸ்பூன் கரம் மசாலா - ஒரு பின்ச்  உப்பு - தேவைக்கு  தாளிக்க எண்ணெய் - 2 டீஸ்பூன்  கடுகு - அரை டீஸ்பூன் சீரகம் - அரை டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு கடலை பருப்பு - 2 டீஸ்பூன்  உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்  முந்திரி பருப்பு - 5 செய்முறை முதலில் அரிசியை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, முந்திரி போட்டு தாளிக்கவும், அதனுடன் துருவிய இஞ்சி சேர்த்துக்கொள்ளவும். இப்பொழுது பொடியாக கட் செய்த வெங்காயம், தக்காளி சேர்த்து வேகவிடவும். தக்காளி பாதி வெந்தவுடன் மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும். மசாலா வாசனை போன பின்பு சாதத்தை போட்டு கிளறி இறக்கவும். சுவையான  சிம்பிள் தக்காளி சாதம் தயார்.

பாசந்தி

செய்முறை  பால் - 1 லிட்டர் சர்க்கரை - 200 கிராம் நெய் - அரை டீஸ்பூன் பாதாம் பருப்பு - 3 பிஸ்தா பருப்பு - 3 முந்திரி பருப்பு - 3 குங்கும பூ - சிறிதளவு செய்முறை ஒரு வாணலியில் பாலை ஊற்றி மிதமான தீயில் காய்ச்சவும். பால் ஏடு வர வர தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொண்டு வரவும். ஒரு லிட்டர் பால் அரை லிட்டராக குறையும் போது அதிலும் பாதி பாலை (கால் லிட்டர்) எடுத்து வைத்த ஏட்டின் மேல் ஊற்றவும். இப்போது மீதி உள்ள கால் லிட்டரில் சர்க்கரையை போட்டு கரைந்ததும் துருவிய முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்புகளை போட்டு இதையும் ஏடு எடுத்து வைத்த பாத்திரத்தில் ஊற்றவும். அதன் மேலே குங்கும பூ சிறிதளவு தூவி பிரிட்ஜில் வைத்து ஜில்லென பரிமாறவும். இப்போது சுவையான பாசந்தி தயார்.