முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்பைசி மீன் குழம்பு / spicy fish kuzhambu

தேவையானவை: மீன் - 1/2 கிலோ வெங்காயம் - 1 புளி - 1 எலுமிச்சை அளவு வெள்ளை எள்ளு - 2 tsp தேங்காய் - 1 பத்தை பூண்டு - 3 பல் பச்சை மிளகாய் - 1 மிளகாய் தூள் - 1 tsp தனியா தூள் - 2 tsp மஞ்சள் தூள் - 1/4 tsp சீரக தூள் - 1/4 tsp சோம்பு தூள் - 1/2 tsp தாளிக்க: நல்லெண்ணெய் - 3 tsp கடுகு - 1/2 tsp சீரகம் - 1 tsp வெந்தயம் - 1 tsp பெருங்காயம் - 1 பின்ச் கறிவேப்பிலை - 1 கொத்து செய்முறை: மீனை நன்கு கழுவி சுத்தம் செய்யவும். மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிசறி மீண்டும் ஒரு முறை கழுவி வைக்கவும். இது மீனின் வாடையை போக்கும். எள்ளு மற்றும் வெங்காயத்தை சிறிது எண்ணையில் வதக்கி அதனுடன் தேங்காய் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும். ஒரு கடாயில் நல்ல எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும். அதனுடன் பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும். இப்பொழுது அரைத்த விழுது, புளிதண்ணீர், தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்து மசாலா வாசனை நீங்கியவுடன் சுத்தம் செய்த மீனை போட்டு 5 நிமிடங்கள் மூடி போட்டு வெந்த பின் இறக்கவ

எலுமிச்சை ரசம் / lemon rasam

தேவையானவை: எலுமிச்சை பழம் - 1 தக்காளி - 1 பருப்பு வேகவைத்த தண்ணீர் - 3 கப் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் பூண்டு - 3 பல் மிளகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 1 உப்பு - தேவைக்கு தாளிக்க: நெய் - 2 டீஸ்பூன் கடுகு - 1/4 டீஸ்பூன் சீரகம் - 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை - 1 கொத்து பெருங்காயம் - 1 பின்ச் செய்முறை: தக்காளியை துண்டங்களாக நறுக்கி ஓவனில் 2 நிமிடங்கள் வைத்து மசித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மசித்த தக்காளி,பருப்பு வேகவைத்த தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பூண்டு, மிளகு, சீரகம், பச்சை மிளகாயை நன்கு இடித்து கொள்ளவும். ரசம் நன்கு கொதிக்கும் போது இடித்து வைத்த கலவையை போட்டு மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும்.' இப்போது அடுப்பை அணைத்த பிறகு ஒரு எலுமிச்சை பழத்தை பிழியவும்.  தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு வறுத்து ரசத்தில் ஊற்றவும். சுவையான எலுமிச்சை ரசம் ரெடி. குறிப்பு: ரசத்தை இறக்கிய பின்னரே எலுமிச்சையை பிழியவும். எலுமிச்சை பிழிந்த பின் ரசத்தை கொதிக்க வைக்க கூடாது. மறுபடியும் ரசத்தை சூடாக்கினால், ரச

ஓட்ஸ் உப்புமா / oats uppuma

தேவையானவை: ஓட்ஸ் - 1/2 கப் நறுக்கிய வெங்காயம் - 1/2 கப் தக்காளி - 1 பச்சை மிளகாய் - 2 கீறியது உப்பு - தேவைக்கு எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் இஞ்சி துருவியது - 1 டீஸ்பூன் தாளிக்க: எண்ணெய் - 2 டீஸ்பூன் கடுகு - 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - ஒரு கொத்து பெருங்காயம் - ஒரு பின்ச் செய்முறை: ஓட்ஸ்-ஐ ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வாசனை வரும் வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி தாளித்து இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி என ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும். பின்பு வறுத்து வைத்த ஓட்ஸ், தேவையான உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும். ஓட்ஸ் நன்கு வெந்ததும், எலுமிச்சை சாறை கலந்து இறக்கவும். சுவையான ஓட்ஸ் உப்புமா தயார். இதனை சூடாக பரிமாறவும்.

வெங்காய குழம்பு / vengaya kuzhambu

தேவையானவை: சின்ன வெங்காயம் - 10 புளி - 1 எலுமிச்சை அளவு மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவைக்கு வறுத்து அரைக்க: தனியா - 2 டீஸ்பூன் கடலை பருப்பு - 1 1/2 டீஸ்பூன் வெந்தயம் - 1/2 டீஸ்பூன் தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் வற்றல் - 2 தாளிக்க: நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன் கடுகு - 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் வெந்தயம் - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது பச்சை மிளகாய் - 1 செய்முறை: முதலில் அரைக்க வேண்டிய பொருட்களை வெறும் வாணலியில் தனி தனியாக வறுத்து நன்கு பொடித்து கொள்ளவும். வெங்காயத்தை இரண்டாகவும், புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும். ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக தாளித்து கொள்ளவும். பின்னர் சின்ன வெங்காயம் போட்டு நன்கு வதக்கி கொள்ளவும். அதனுடன் வறுத்து அரைத்த பொடி, மஞ்சள் தூள் மற்றும் புளி தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு வாசனை வந்து சற்று திக்கான பதத்திற்கு வந்தவுடன் பரிமாறலாம். ருசியான வெங்காய குழம்பு ரெடி. இதனை சாதத்துடன் அப்பளம், வட

கடலை மாவு லட்டு / besan ladoo

தேவையானவை: கடலை மாவு - 1 1/2 கப் ரவை - 3 டீஸ்பூன் பொடித்த சர்க்கரை - 3/4 கப் வெண்ணை (அ) நெய் - 1/2 கப் ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன் பாதாம் பருப்பு - 5 செய்முறை: வெண்ணை (அ) நெய்யை உருக்கி கொள்ளவும்.  ஒரு கடாயில் கடலை மாவு, ரவை மற்றும் வெண்ணை (அ) நெய் ஊற்றி வறுக்கவும். தீ மிதமாகவே இருக்கட்டும். நன்கு வாசனை வரும் வரை விடாது கிளறி கொண்டே இருக்கவும். 10 நிமிடங்களில் ஒரு கலவையாக திரண்டு வரும் பதத்தில் இதனை ஒரு தட்டில் மாற்றவும். பாதி சூடு ஆறிய பிறகு ஏலக்காய் தூள் மற்றும் பொடித்த சர்க்கரை சேர்த்து சிறிய உருண்டையான லட்டுகளாக பிடித்து கொள்ளவும். ஒவ்வொரு லட்டின் மேலும் துருவிய பாதாம் பருப்பினை வைத்து அலங்கரிக்கவும். சுவையான மற்றும் வாசமான கடலை மாவு லட்டு தயார். அனைவருக்கும் "இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்"

மட்டன் பிரியாணி / mutton biriyani

தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப்  மட்டன் - 300 கிராம்  நறுக்கிய வெங்காயம் - 1 கப்  தக்காளி - 1 இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன் அளவு  தயிர் - 4 டீஸ்பூன்  கொத்தமல்லி இலை - சிறிது  புதினா இலை - சிறிது  பிரியாணி மசாலா தூள் - 2 டீஸ்பூன்  மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்  கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்  மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை  உப்பு - தேவைக்கு  தாளிக்க: நெய் - 1 டீஸ்பூன்  எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்  பட்டை - 1 சோம்பு - 1/2 பிரிஞ்சி இலை - 1 செய்முறை: பாசுமதி அரிசியை நன்கு கழுவி 2 கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு உதிர் உதிராக வேக வைத்து கொள்ளவும். மட்டனை நன்கு கழுவி வைக்கவும். வெங்காயம் தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும். இஞ்சி பூண்டை விழுதாக அரைத்து கொள்ளவும். ஒரு குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பட்டை, சோம்பு, இலை போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுதினை ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும். இப்பொழுது மட்டன் மற்றும் தூள் வகைகளை போட்டு 10 நிமிடங்கள் வதக்கவும்.  அதில் தயிர், மல்

மீன் ரோஸ்ட் / fish roast

தேவையானவை: மீன் - 2 பெரிய துண்டுகள் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் தனியா தூள் - 2 டீஸ்பூன் சீரக தூள் - 1/2 டீஸ்பூன் மிளகு தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவைக்கு தாளிக்க: சோம்பு - 2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - 4 டீஸ்பூன் செய்முறை: மீனை நன்கு கழுவி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிரட்டி மீண்டும் கழுவி வைக்கவும். தூள் வகைகள் மற்றும் உப்பினை சிறிது தண்ணீர் விட்டு கலந்து மீனுடன் சேர்த்து பிரட்டவும். இப்போது மசாலா கலந்த மீனை ப்ரீசரில் அரை மணி நேரம் வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு, கறிவேப்பிலை தாளித்து அதிலேயே மீனை போட்டு வேக விடவும். அடிக்கடி எண்ணெய் ஊற்றி மீன் நன்கு முறுகலாகும் வரை வேகவிடவும்.  இப்பொழுது சுவையான மீன் ரோஸ்ட் தயார். குறிப்பு: மீன் ரோஸ்ட் ரெடி ஆனவுடன் சிறிது பூண்டு தூள் தூவி இறக்கினால் இன்னும் சுவை கூடும். அடிக்கடி மேலே சிறிது சிறிதாக எண்ணெய் ஊற்றினால் நன்கு முறுகலாக வரும். இதனை எல்லா வகையான சாதத்திற்கும் பரிமாறலாம்.

ரவை பணியாரம்/ rawa paniyaram

தேவையானவை: ரவை - 1 கப் மைதா - 3/4 கப் சர்க்கரை - 1 கப் ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன் எண்ணெய் - 3 டீஸ்பூன் செய்முறை: முதலில் ரவை, மைதா, சர்க்கரை, ஏலக்காய் தூளை ஒரு பவுலில் போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைக்கவும். நிறைய தண்ணீர் விட கூடாது. சற்று கெட்டியாக இருக்கும் பதத்தில் கலந்து கொள்ளவும். இதனை ஒரு அரை மணி நேரம் அப்படியே ஊற விட வேண்டும். சிறிது கெட்டியாகி விட்டால் மேலும் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளலாம். குழிபணியார சட்டியில் எண்ணெய் விட்டு மாவை ஊற்றி பணியாரமாக சுடலாம். சுவையான மற்றும் எளிதான ரவை பணியாரம் ரெடி. பின்குறிப்பு: ரவை பணியாரத்தை நேரடியாக எண்ணையிலும் பொறிக்கலாம். அதிக சுவையுடன் நிறைய சாப்பிட தூண்டும். 

வெங்காய பக்கோடா (onion pakkoda)

தேவையானவை: நறுக்கிய வெங்காயம் - அரை கப்  கடலை மாவு - அரை கப்  அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்  பச்சை மிளகாய் - 1 இஞ்சி - சிறிய துண்டு  பூண்டு - 1 பல்  சோடா உப்பு - 1 பின்ச்  பெருங்காயம் - 2 பின்ச்  கறிவேப்பிலை - சிறிது  உப்பு - தேவைக்கு  எண்ணெய் - பொரிக்க  செய்முறை: ஒரு பௌலில் வெங்காயம், மாவு வகைகள், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு, சோடா உப்பு  போடவும். அதில் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசையவும். அதை சிறிய உருண்டைகளாக எடுத்து சூடான எண்ணையில் பொரித்தெடுக்கவும். சுவையான வெங்காய பக்கோடா ரெடி. பின் குறிப்பு: இதனை உதிர் உதிராகவும் போட்டு தூள் பக்கோடா செய்யலாம்.  தேவை பட்டால் ரெட் கலர் சேர்த்து கொள்ளலாம். கலர்புல்லா இருக்கும்.

முட்டை குழம்பு (muttai kuzhambu)

தேவையானவை: முட்டை - 2 வெங்காயம் - 1 பெரியது தக்காளி - 1 சோம்பு - 1 டீஸ்பூன் கசகசா - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் தனியா தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவைக்கு தாளிக்க: எண்ணெய் - 2 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது செய்முறை: வெங்காயம் மற்றும் தக்காளியை சிறியதாக கட் செய்து கொள்ளவும். மிக்ஸி ஜாரில் நறுக்கிய வெங்காயம், சோம்பு மற்றும் கசகசா சேர்த்து நைசாக அரைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளித்து அரைத்து வைத்த வெங்காய கலவையை நன்றாக வதக்கிய பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் மசாலா தூள் வகைகள் மற்றும் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதி வந்து வாசம் வந்தவுடன் முட்டையை உடைத்து ஊற்றவும். இப்போது கிளற வேண்டாம். மூன்று நிமிடங்கள் கழித்து முட்டையை திருப்பி போட்டு வேக விடவும். முட்டை சிறிது நேரத்தில் வெந்த பின்பு பரிமாறலாம். சுவையான, எளிமையான முட்டை குழம்பு தயார். இது சப்பாத்தி, பூரி மற்றும் சாதம் ஆகியவற்றுக்கு அருமையாக இருக்கும். குறிப்பு: முட

எலுமிச்சை சாதம்(lemon rice)

தேவையானவை: சாதம் - 1 கப் எலுமிச்சை - 1 உப்பு - தேவைக்கு வேர்கடலை - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் தாளிக்க: நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் பூண்டு - 3 பல் காய்ந்த மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிது பெருங்காயம் - சிறிது கடலை பருப்பு - 2 டீஸ்பூன் செய்முறை: சாதத்தை உப்பு போட்டு உதிர் உதிராக வடித்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். எலுமிச்சையை பிழிந்து ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் கலந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வேர்கடலை, மிளகாய் வற்றல், பூண்டு, பெருங்காயம், கடலை பருப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வறுக்கவும். அத்துடன் எலுமிச்சை சாறை விட்டு ஒரு கொதி வந்தவுடன் சாதத்தில் கலக்கவும். எலுமிச்சை சாதம் ரெடி.  குறிப்பு: தாளிக்கும் பொருட்கள் கருக விடாமல் வாசம் வரும் வரை வறுக்கவும். எலுமிச்சை சாறு விட்ட பின் அதிக நேரம் கொதிக்க வைக்க வேண்டாம். இல்லை என்றால் கசந்து விடும்.

அஸ்பாரகஸ் பொரியல் (asparagus poriyal)

தேவையானவை: அஸ்பாரகஸ் - 5 வெங்காயம் - 1 பெரியது  மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்  மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்  தனியா தூள் - 2 டீஸ்பூன்  உப்பு - தேவைக்கு  தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்  தாளிக்க: எண்ணெய் - 1 டீஸ்பூன்  கடுகு - 1/2 டீஸ்பூன்  சீரகம் - 1 டீஸ்பூன்  உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்  செய்முறை: அஸ்பாரகஸ் மற்றும் வெங்காயத்தை சிறியதாக கட் செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக தாளிக்கவும். அதில் வெங்காயத்தை சிறிது நேரம் வதக்கிய பின்னர் அஸ்பாரகஸ் சேர்த்து தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி மூடி போடவும். அஸ்பாரகஸ் சீக்கிரமே வெந்து விடும். மசாலா வாசனை போன பின்பு தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான மற்றும் சத்து மிக்க அஸ்பாரகஸ் பொறியல் தயார். குறிப்பு          இதே செய்முறையில் வெள்ளை அஸ்பாரகஸ் பொரியல் செய்யலாம். இந்த காய் சீக்கிரமே வெந்து விடும். அதிக நேரம் வேக வைக்க தேவை இல்லை. இதில் வைட்டமின் - ஏ, இரும்பு சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின் - சி அதிக அளவில் உள்ளது.

தக்காளி சட்னி (tomato chatney)

தேவையான பொருட்கள்: தக்காளி - 2 பெரியது வெங்காயம் - 1 பெரியது பூண்டு - 4 பல் புளி - ஒரு அங்குல துண்டு தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன் உப்பு -தேவைக்கு வறுக்க: கடலை பருப்பு - 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன் மிளகாய் வற்றல்- 2 தாளிக்க: எண்ணெய் - 3 டீஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது செய்முறை: தக்காளி, வெங்காயம், பூண்டு இவற்றை சிறியதாக கட் செய்து கொள்ளவும்.தேங்காயை துருவி கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல் வறுத்து அத்துடன் தேங்காய் துருவல் மற்றும் புளி சேர்த்து வதக்கவும்.இதனை மிக்ஸி ஜாரில் போட்டு இரண்டு சுற்று சுற்றி எடுத்து கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு வதக்கவும். வதங்கிய கலவை ஆறியவுடன் ஏற்கனவே அரைத்து வைத்தவையுடன் சேர்த்து அரைக்கவும். சட்னியில் உப்பு கலந்து தாளித்து கொட்டவும். சுவையான தக்காளி சட்னி தயார். குறிப்பு: இத்துடன் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியுடன் சேர்த்து வதக்கி அரைக்கும் போது சுவை மேலும் கூ

நெய் பருப்பு (ghee dal)

தேவையான பொருட்கள்: பாசி பருப்பு - 1 கப் சின்ன வெங்காயம் - 5 மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவைக்கு தாளிக்க: நெய் - 2 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் மிளகாய் வற்றல் - 1 கறிவேப்பிலை - சிறிது பெருங்காயம் - ஒரு பின்ச் செய்முறை: பாசிப்பருப்பை தண்ணீர் ஊற்றி கழுவி வைக்கவும். சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும். ஒரு குக்கரில் பாசிப்பருப்பு, வெங்காயம், மஞ்சள் தூள், சேர்த்து மூடி வைக்கவும். ஐந்து நிமிடத்தில் அடுப்பை அணைத்த பின்பு தேவையான உப்பு சேர்க்கவும். பின்னர் நெய்யில் தாளிக்க வேண்டிய சாமான்களை போட்டு வறுத்து பருப்பில் கொட்டவும். சுவையான நெய் பருப்பு ரெடி. குறிப்பு: இதனை துவரம்பருப்பிலும் செய்யலாம். இதே செய்முறை தான்.  குக்கரில் பருப்பினை வைக்கும் போதே சீரகம், சின்ன வெங்காயம், மிளகாய் வற்றலை மிக்சியில் அரைத்து சேர்த்து வேக வைப்பது இன்னொரு முறை. இதனை சூடான சாதத்துடன் பரிமாற மிகவும் சுவையாக இருக்கும்.

மசாலா தூள் (masala powder)

தேவையான பொருட்கள்: கொத்தமல்லி (தனியா) - கால் கிலோ மிளகாய் வற்றல் - கால் கிலோ விரலி மஞ்சள் - 10 சீரகம் - 50 கிராம் மிளகு - 50 கிராம் சோம்பு - 25 கிராம் பெருங்காயம் - 15 கிராம் வெந்தயம் - 10 கிராம் அரிசி - அரை கப் பட்டை - 5 கறி மசால் இலை - 5 செய்முறை: மேற்சொன்ன அனைத்து பொருட்களையும் ஒரு நாள் வெயிலில் நன்றாக காய வைத்து வெறும் வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் தனித்தனியாக வறுத்து மெஷினில் குடுத்து அரைக்கவும். இவற்றை வீட்டிலேயே மிக்சியிலும் அரைக்கலாம். ஒரு வாரத்திற்கு தேவையான அளவு எடுத்து வறுத்து அரைத்து காற்று புகா பாட்டிலில் போட்டு உபயோகபடுத்தலாம்.  மணமும் அபாரமா இருக்கும். இதனை அனைத்து வகையான குழம்பு, சாம்பார், கூட்டு, பொரியல் வகைகள் செய்ய பயன்படுத்தலாம்.